இலக்கணம் வினாவிடை

331) உயிர் நெடில் எழுத்து (ஆ, ஈ, ஊ, ஏ, ஓ, ஒள) எத்தனை மாத்திரை அளவு உடையது?
2
332) சொல் என்பது எதனைக் கொண்டது?
எழுத்துகள்
333) எதிர்கால இடைநிலைகள் யாவை?
ப், வ்
334) யாப்பின் பா வகைகள் யாவை?
வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா
335) உயிர்மெய்க் குறில் (க, சி, கு, கெ, கொ...) எத்தனை மாத்திரை அளவு உடையது?
1
336) பதம் என்பதன் பொருள் என்ன?
சொல்
337) புணர்ச்சி என்றால் என்ன பொருள்?
சேர்தல்
338) யாப்பு என்றால் என்ன?
கட்டுதல்
339) உயிர்மெய் நெடில் (கா, சீ, கூ, கை, கோ...) எத்தனை மாத்திரை அளவு உடையது?
2
340) ஆண்டு என்பது என்ன பெயர்?
காலப்பெயர்
341) பனை + மரம் என்பது எம்முறைப் புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு?
உயிர் எழுத்து முன் மெய் எழுத்து