இலக்கணம் வினாவிடை

342) உயிர்மெய் நெடில் (கா, சீ, கூ, கை, கோ...) எத்தனை மாத்திரை அளவு உடையது?
2
343) ஆண்டு என்பது என்ன பெயர்?
காலப்பெயர்
344) பனை + மரம் என்பது எம்முறைப் புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு?
உயிர் எழுத்து முன் மெய் எழுத்து
345) தமிழில் இலக்கணம் எத்தனை வகைபெறும்?
ஐந்து
346) மெய்யெழுத்து ஒலி (க், ங், ச், ...) எத்தனை மாத்திரை அளவு உடையது?
1/2
347) பூ என்பது என்ன பெயர்?
சினைப்பெயர்
348) பனை + ஓலை என்பது எவ்வாறு வரும்?
உயிர் எழுத்து முன் உயிரெழுத்து
349) செய்யுளுக்கு மேலும் இனிமை சேர்ப்பது எது?
அணி
350) குற்றியலுகரம் எத்தனை மாத்திரை அளவில் ஒலிக்கும்?
1/2
351) படித்தல் என்பது என்ன பெயர்?
தொழிற்பெயர்
352) மலர் + மாலை என்பது எம்முறைப் புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு?
மெய் எழுத்து முன் மெய்யெழுத்து