இலக்கணம் வினாவிடை

353) மரம் + வேர் = மரவேர் என்பது எவ்வகை விகாரப் புணர்ச்சி?
கெடுதல்
354) ஒருமை, பன்மை என்பன எதன் வகைகள்?
எண்
355) வினைச்சொல்லில் முன்னிலை ஒருமை எவ்வாறு முடியும்?
ஆய்
356) பனை + மரம் என்பது எவ்வகைப் புணர்ச்சி?
இயல்பு
357) உயர்திணை, அஃறிணை என்பன எதன் வகைகள்?
திணை
358) வினைச்சொல்லில் முன்னிலைப் பன்மை எவ்வாறு முடியும்?
ஈர்
359) புணர்ச்சியின் வகைகள் எத்தனை?
இரண்டு