பொருள் வினாவிடை

1) ஓரெழுத்து ஒரு மொழி ‘எ’ என்பதன் பொருள் என்ன?
எந்த
2) ஓரெழுத்து ஒரு மொழி ‘து’ என்பதன் பொருள் என்ன?
உண்
3) ‘நா’ என்ற ஓரெழுத்தின் பொருள் என்ன?
நாக்கு
4) ‘இகல்’ என்பதின் எதிர்ச்சொல் எது?
நட்பு
5) ‘அரு’ என்பதின் எதிர்ச்சொல் எது?
உருவம்
6) ஓரெழுத்து ஒரு மொழி ‘ஏ’ என்பதன் பொருள் என்ன?
ஏவு
7) ஓரெழுத்து ஒரு மொழி ‘தூ’ என்பதன் பொருள் என்ன?
தூய்மை
8) “தான் ஆடவிட்டாலும் தன் சதை ஆடும்” – இவ்வுவமை விளக்கும் பொருள் எது?
பாசம்
9) ‘நீரவர்’ என்பதின் எதிர்ச்சொல் எது?
அறிவிலார்
10) ‘ஏமரா’ என்பதின் எதிர்ச்சொல் எது?
பாதுகாப்புடைய