இலக்கணம் வினாவிடை

89) “சினங்காப்பான்” – இலக்கணக் குறிப்பு எது?
இரண்டாம் வேற்றுமைத்தொகை
90) ‘நான் பாடல் பாடினேன்’ – எவ்வகை வாக்கியம்?
செய்வினை
91) நெடில் எழுத்து மாத்திரை?
2 மாத்திரை
92) “வாழ்க” – இலக்கணக் குறிப்பு எது?
வியங்கோள் வினைமுற்று
93) ‘சிலை சிற்பியால் செதுக்கப்பட்டது’ – எவ்வகை வாக்கியம்?
செயப்பாட்டுவினை
94) மெய் எழுத்து மாத்திரை?
அரை மாத்திரை
95) “வரையா மரபு” – இலக்கணக் குறிப்பு எது?
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
96) ‘இராவணன் இராமனால் கொல்லப்பட்டான்’ – எவ்வகை வாக்கியம்?
செயப்பாட்டுவினை
97) மகரக் குறுக்கு மாத்திரை?
கால் மாத்திரை
98) தொழிற்பெயர் அல்லாதது எது?
கெடும்
99) ‘பேசாதே’ – எவ்வகை வாக்கியம்?
கட்டளை