பொருள் வினாவிடை

1) ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத்‌ தேர்க : கலை களை
ஆண்மான் அகற்று
2) ஓரெழுத்து ஒரு மொழி ‘கூ’ என்பதன் பொருள் என்ன?
கூவு
3) “பட்டுப் போல” – உவமை புலப்படுத்தும் பொருள் எது?
மென்மை
4) ‘குரிசில்’ என்பதின் எதிர்ச்சொல் எது?
தொண்டன்
5) ஒலிவேறுபாடறிந்து சரியான பொருளைத்‌ தேர்க: இளை இழை
மெலிதல் நூல்
6) ஓரெழுத்து ஒரு மொழி ‘கை’ என்பதன் பொருள் என்ன?
கரம்
7) “இருதலைக் கொள்ளி எறும்பு போல” – உவமை புலப்படுத்தும் பொருள் எது?
தவிப்பு
8) ‘கடை’ என்பதின் எதிர்ச்சொல் எது?
சிறப்பு
9) ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத்‌ தேர்க : தண்மை தன்மை
குளிர்ச்சி இயல்பு
10) ஓரெழுத்து ஒரு மொழி ‘கோ’ என்பதன் பொருள் என்ன?
அரசன்