இலக்கணம் வினாவிடை

1) வன்மையான ஓசையுடைய எழுத்துகள் என்ன ?
வல்லினம்
2) உயிர் எழுத்துகள் மொத்தம் எத்தனை ?
12
3) நீண்ட ஓசையுடைய எழுத்துகள்
நெடில்
4) மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை ?
18
5) குறுகிய ஓசையுடைய எழுத்துகள்
குறில்
6) உயிர்மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை ?
216
7) உயிர் பன்னிரெண்டும் மெய் பதினெட்டும் ஆகிய முப்பது எழுத்துகள்
முதலெழுத்துகள்
8) உயிர் குறில் எழுத்துகள் எவை?
அ, இ, உ, எ, ஒ
9) முதலெழுத்துகளை சார்ந்து பிறக்கும் எழுத்துகள்
சார்பெழுத்துகள்
10) உயிர் நெடில் எழுத்துகள் எவை?
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ
11) எங்கு பிறப்பது வல்லினம்
மார்பில்